வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (01/07/2017)

கடைசி தொடர்பு:19:09 (01/07/2017)

ஜிஎஸ்டி அறிமுக நாளில் ஏற்றம்கண்ட இந்தியப் பங்குச்சந்தை!

ஜிஎஸ்டி அறிமுக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தை

உலகச் சந்தையில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கமாகவே இருந்துவந்த பங்குச்சந்தை, இன்றைய நாளின் இறுதியில் உச்சத்தில் நிறைவடைந்தது. இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 64.09 புள்ளிகள் உயர்ந்து, 30,921 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 16.80 புள்ளிகள் உயர்ந்து, 9,520 புள்ளிகளாகி நின்றது.

ஜிஎஸ்டி மசோதா, இன்று ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதையொட்டி, வர்த்தகத்தில் பல பங்குகளின் மீதான முதலீடுகள் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளதால், இன்றைய வர்த்தகம் உச்சத்தில் நிறைவடைந்திருக்கலாம் என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.