’தீய சக்திகளின் ஆதிக்கம்...’: பத்திரிகை விழாவில் சோனியா ஆவேசம்!

’சகிப்புத் தன்மைக்கு எதிரான கேள்விகளை நாட்டில் உள்ள தீய சக்திகள் எழுப்பிவிடுகின்றன’ என மத்திய அரசின் செயல்பாடு குறித்து சோனியா காந்தி கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

சோனியா

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மீண்டு துவக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட இப்பத்திரிகையின் மறு தொடக்கவிழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவ்விழாவிற்கு தலைமையேற்றார். இவ்விழாவில் மத்திய அரசை பெயர் குறிப்பிடாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கி பேசினார்.

விழாவில் சோனியா காந்தி பேசியதாவது, ‘நாட்டில் சகிப்புத் தன்மைக்கு எதிரான கேள்விகளை தீய எண்ணங்கள் கொண்ட சில சக்திகள் எழுப்பிவிடுகின்றன. மக்கள் எதை சாப்பிடவேண்டும், என்ன செய்யவேண்டும், யாரை விரும்ப வேண்டும் என்பது முதல் அத்தனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் எண்ணங்களையும், விருப்பங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நாட்டில் நடக்கும் தவறான ஆட்சிக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல் எல்லாவற்றிருக்கும் நம் அமைதியே சம்மதம் தெரிவித்தது போல் ஆகிவிடும்’ என ஆக்ரோஷமாகப் பேசினார். இவ்விழாவில் சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு நாட்டின் நிலை குறித்து பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!