Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்லும் காலம் வரும்..’: மோடி எச்சரிக்கை!

கறுப்புப் பணம் மூலம் நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோடி

டெல்லியில் நடைபெற்ற சார்டர்ட் அக்கவுன்டன்ட் நிறுவன விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஜிஎஸ்டி குறித்தும், கறுப்புப்பண விவகாரம் குறித்தும் பேசினார். விழாவில் மோடி பேசுகையில், ‘நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிக்கு ஆதரவு அளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி. நாட்டை ஊழலிலிருந்து மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. தற்போது, நாட்டை முற்றிலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியே ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், கறுப்புப்பணம், ஊழல் குறித்து பேசுகையில், ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கறுப்புப்பணம் குறைந்துவிட்டது. இதனால், சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப்பணம் குறைந்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி மூலம் இனி யாராலும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. வரி ஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது’ என ஆவேசமாகப் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement