Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்!' மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு!

மத்திய தகவல் ஆணையம்

'ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலைப் பொதுத் தளத்தில் வைக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு, தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

மத்திய அரசில் இயங்கும் ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகள், ஊழலில் ஈடுபடுவதை இந்த அரசு மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சமீபத்தில், ஊழல் புகாரில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்கியிருந்தனர். அவர்கள் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஐஏஎஸ் அதிகாரிகளில், 29 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்கள். இதுதவிர, சில மூத்த அதிகாரிகள் உள்பட 68 அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 'ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலைப் பொதுத் தளத்தில் வைக்க வேண்டும்'' என மத்திய அரசுக்குத் தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.


 மத்திய அரசுக்குத் தகவல் ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், 'ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பெயர்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்; அந்த அதிகாரிகள் அடங்கிய பட்டியலைப் பொதுத் தளத்தில் வைக்க வேண்டும்; ஒவ்வொரு துறையிலும் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close