Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடைவிதித்த கிராமம்!

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்தில், பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

rajesthan panchayat
 

ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் பஞ்சாயத்தில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்கள், ஜீன்ஸ் பேன்ட் அணிவதற்குத் தடை விதித்தது மட்டுமன்றி, செல்போன் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளனர். பெண்கள், இறுக்கமான ஆடை அணிவது கிராமத்தின் கண்ணியத்தைக் குலைப்பதாக அவர்கள் கருதியதால், இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நாடு முழுவதும் கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்துள்ள உத்தரவு பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மகளிர் கமிஷனுக்குப் புகார்கள் குவிந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், ராஜஸ்தான் மகளிர் கமிஷன் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

தோல்பூர் கிராம மக்கள் இதுகுறித்து வாய்திறக்க மறுப்பதாக, ராஜஸ்தான் பெண்கள் கமிஷன் தலைவர் சுமன் ஷர்மா தெரிவித்துள்ளார். 'பெண்கள் ஜீன்ஸ் அணியவும் செல்போன் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது உண்மையென்று தெரியும்பட்சத்தில், கிராமப் பஞ்சாயத்து மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சுமன் ஷர்மா உறுதியளித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close