Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி வரி குறித்து சான்றிதழ் படிப்பு... மத்திய அரசு அறிமுகம் #GST

மத்திய அரசு நாடு முழுவதும் உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளுக்கான (GOODS & SERVICES TAX) ஒரே வரி முறையை ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரி குறித்து நிபுணத்துவம் பெற வைக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் ஜிஎஸ்டி வரி குறித்த 100 மணி நேரச் சான்றிதழ் படிப்பை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. 

ஜி.எஸ்.டி.


முதல்கட்டமாக பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் கீழ் புதுடெல்லி, பெங்களூரு மற்றும் போபால் நகரங்களில் இந்த படிப்பை அறிமுகப்படுத்த உள்ளார்கள். பயிற்சிக்கான வகுப்பு ஜூலை 15-ம் தேதியில் இருந்து தொடங்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. 


இந்த பயிற்சியில் கணக்கு தணிக்கையாளர்கள், நிறுவன செயலாளர்கள், வணிகவியல், வங்கி, புள்ளியியல், நிதிச் சந்தை, வணிக மேலாண்மை சார்ந்த பிரிவுகளில் பணியாற்றுபவர்களும், பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும் கலந்துகொள்ளலாம். 

ஜி.எஸ்.டி. GSTஇந்த பயிற்சித் திட்டம் குறித்து பேசிய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் ராஜூவ் பிரதாப் ரூடி "இளைஞர்களுக்கு தொழில்சார்ந்த கல்விப் பயிற்சி வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதனை மத்திய அரசும் உணர்ந்து இருக்கிறது. பயிற்சியின் தரத்தை மேம்படுத்தவும், தரமான கல்வியும் கிடைப்பதற்காக ஜி.எஸ்.டி.-யில் கல்விக்கும், திறன் மேம்பாடு சார்ந்த பயிற்சிக்கும் விலக்களித்திருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சில். இனி திறன்சார்ந்த பயிற்சிக்கான கட்டணங்கள் குறையும், தரமான பயிற்சியும் கிடைக்கும். 

ஜி.எஸ்.டி. நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பதன் மூலம் மத்திய அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தைக் மேற்கொண்டிருக்கிறது. இந்த வரியை வரவேற்று, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய பங்களிப்பையும் வழங்கிச் சிறப்பாக செயல்பட உதவிட வேண்டும். 

தற்போது வரி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு உடனடி பயிற்சியளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதன் மூலம் நிதி சார்ந்த துறையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி. குறித்துப் புரிய வைக்கவும், ஜிஎஸ்டி வரிக்காகப் பதிவு செய்யவும், செயல்படுத்தலுக்கும், கணக்கிடுவதற்கும் உதவியாக இருக்கும். மேலும், ஜிஎஸ்டி மூலம் 11 % அளவுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தேசிய அளவில் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார். 

மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு தனியார் அமைப்புகளும் ஜிஎஸ்டி சார்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்தப் பயிற்சியில் ஜிஎஸ்டி வரி குறித்து அடிப்படை விஷயங்களையும், பதிவு செய்தல், வரியைத் தாக்கல் செய்தல், செலுத்திய வரியைத் திரும்பப் பெறுதல், வரி விலக்கு பெறுதல், பணத்தைத் திரும்பப் பெறுதல் குறித்தும், ஜிஎஸ்டி வரியை நிறுவனங்களில் செயல்படுத்தவும், என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்தும் கற்றுக்கொடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 

ஒரு நாள் பயிற்சி, மூன்று நாள்களுக்கான பயிற்சி, பத்து நாள்களுக்கான பயிற்சி என்று பல வகையில் பயிற்சி வழங்குகின்றன. பயிற்சிக் கட்டணமாக ஆயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை பெறுகிறார்கள். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள தொழில் வணிகம், நிதித் துறை, சிறு தொழில் முனைவோர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் எனப் பலரையும் பயிற்சியில் கலந்துகொள்ள அழைக்கிறார்கள். இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் ஆஃப் இந்தியா ஆடிட்டர்களுக்கு என்று தனியே பத்து நாள்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்துகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close