Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’1962 போர்’: அருண் ஜெட்லிக்கு சீனா அளித்துள்ள பதில்! 

’1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு. இப்போது இருக்கும் இந்தியாவின் நிலை வேறு’ என்று அருண் ஜெட்லி கூறியதற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

chinaindia
 

இந்தியா மற்றும் பூட்டான் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்து, சிக்கிம் செக்டாரில் சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியை மேற்கொண்டபோது, ’வரலாற்றுப் பாடங்களை இந்தியா மறந்துவிடக்கூடாது. சிக்கிம் செக்டாரில் உள்ள ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’ என்று சீனா எச்சரிக்கைவிடுத்தது.

’வரலாற்று பாடம்’ என்று சீனா குறிப்பிட்டது, 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரைப் பற்றித்தான் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து சீனாவுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அருண் ஜெட்லி, ‘சீனா, பூட்டானின் நிலப்பகுதியை உரிமைக் கோருகிறது என்பதை பூட்டான் அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பூட்டானின் எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க நினைக்கிறது. இந்தியாவும் பூட்டானும் எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன. அப்பகுதியில் போடப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளை இந்தியா திரும்ப பெறாது. சீனா 1962 போரை நினைவுப்படுத்தி இந்தியாவை எச்சரித்துள்ளது. 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு. இப்போது இருக்கும் இந்தியாவின் நிலை வேறு. 1962-ம் ஆண்டு சூழல் வேறு’ என்று குறிப்பிட்டார்.

அருண் ஜெட்லி இவ்வாறு கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சீன வெளியுறவுத்துறையின்  செய்தி தொடர்பாளர், ’1962-ம் ஆண்டில் இருந்த சீனாவின் நிலையும் மாறிவிட்டது. சீனா தன் இறையான்மையை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். 1890-ம் ஆண்டு போடப்பட்ட எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா மீறுகிறது. அந்த ஒப்பந்தத்தைப்  பின்பற்றி சீன பகுதிக்குள் இருந்து உடனடியாக தன் படைகளை இந்தியா திரும்பப் பெறவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close