வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (04/07/2017)

கடைசி தொடர்பு:00:06 (04/07/2017)

மூன்று நாள் பயணமாக மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார்!


மோடி

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று (04-07-17) இஸ்ரேல் செல்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரண்டு நாள்கள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார்.  அவருக்கு, வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவியுடன் இணைந்து வரவேற்றார். பின்னர், அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு, அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்குச் சென்ற மோடி, அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயைச் சந்தித்துப் பேசினார். இதனிடையே, பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். 

நாடு திரும்பிய மோடி, ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தினார். இதற்கான எதிர்ப்புகளும், ஆதரவுகளும் ஒருபுறம் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், மூன்று நாள்கள் பயணமாக இன்று இஸ்ரேல் செல்ல இருக்கிறார். அவர், அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுஹுவைச் சந்தித்துப் பேசுகிறார். அவருடனான சந்திப்பின்போது பயங்கரவாதம், பொருளாதார உறவுகளை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பொதுவான சவால்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். அந்த நாட்டு அதிபர் ரியூவன் ருவி ரிவிலினையும் சந்திக்கும் மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க