Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஸ்ரேலுக்குப் போகும் முதல் பிரதமர் மோடி... பயணத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்னும் ஒரு சில நாள்களில் ஜி-20 மாநாடு நடக்க உள்ள நிலையில், இஸ்ரேலுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி

இந்தப் பயணத்தின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை நேரில் சந்தித்து, இரு நாட்டு உறவுகுறித்து பேச உள்ளார்.  இந்தியா சார்பில் இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணம்குறித்து மோடி, 'இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளி இஸ்ரேல். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின்மூலம் இரு நாட்டு உறவும் மக்களும் இன்னும் நெருக்கமாவோம் என்று நம்புகிறேன். சர்வதேச அளவில் அச்சுறுத்துலாக இருக்கும் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து பிரதமர் நேதன்யாஹுவுடன் ஆலோசிக்க உள்ளேன். மிக முக்கியமாக, இஸ்ரேலில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் நான் கலந்துரையாட ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார் .  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close