10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் கடற்படையில் சேர அரிய வாய்ப்பு! | Good oppurtunity for Matriculation completed candidates to join Indian Navy

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (04/07/2017)

கடைசி தொடர்பு:13:35 (04/07/2017)

10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் கடற்படையில் சேர அரிய வாய்ப்பு!

இந்தியக் கடற்படையில் சமையல்காரர், மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஊழியர் பணியிடங்களுக்கான பயிற்சி சேர்க்கை (Course Commensing 2018) அறிவிக்கப்பட்டுள்ளது.

indian navy
 

10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற, திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்புக்கு இணையான கல்வித் தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 17 வயது முதல் 20 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 1.4.1997 மற்றும்
31.3.2001-க்கு  இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, விண்ணப்பிக்க நினைப்பவர்கள் இந்தியக் கடற்படை குறிப்பிட்டுள்ள உடல்தகுதியையும் பூர்த்திசெய்திருக்க வேண்டும். 

உடல்தகுதி, கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவற்றைப் பூர்த்திசெய்த இளைஞர்களுக்கு, எழுத்துத் தேர்வு  நடத்தப்படும். பின்னர், உடல் உறுதித் தேர்வு, உடல் தகுதித் தேர்வு போன்றவை நடத்தப்படும். தேர்வான இளைஞர்கள் Chef, Steward, Hygienist உள்ளிட்ட பணிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். 

பயிற்சிக் காலத்தின்போது, ஒரு மாதத்துக்கு 14,600 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பயிற்சி முடிந்து பணியமர்த்தப்பட்டதும்  21,700 ரூபாயிலிருந்து 43,100 ரூபாய் வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள இளைஞர்கள் https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/MR.pdf என்ற இணையதள முகவரியை க்ளிக்கிட்டுப் பார்க்கவும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க