வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (04/07/2017)

கடைசி தொடர்பு:14:14 (04/07/2017)

102 வயது டாக்டர்... 101 சதவிகிதம் உத்தரவாதம்!

புனே நகரில் 102 வயதிலும் டாக்டர் ஒருவர் மக்களுக்கு சேவையாற்றிவருகிறார். வாரத்தின் ஏழு நாள்களிலும் பணியில் இருப்பார். ஒரு நாள்கூட விடுப்பு எடுத்ததில்லை.

102 வயது டாக்டர் பல்வந்த்

நாட்டிலேயே மூத்த வயது டாக்டர் இவர்தான். பல்வந்த் கத்பாண்டே என்பது இவரது பெயர். 1941-ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற பல்வந்த், புனே நகரில் இப்போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். இவரின் மகன், பேரன் என குடும்பமே டாக்டர் குடும்பம்தான். தினமும் 10 மணி நேரம் சிகிச்சை அளிக்கும் பல்வந்த் கத்பாண்டேவை, புனே நகர மக்கள் கைராசிக்கார டாக்டராகவே பார்க்கின்றனர். 

டாக்டர் பல்வந்த், அதிகபட்சமாகப் பெறும் கட்டணம், 30 ரூபாய்தான். தனது வருவாயில் பெரும் பகுதியை ஏழை நோயாளிகளின் மருந்து, மாத்திரை செலவுகளுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். மருத்துவத் தொழில்குறித்து, டாக்டர். பல்வந்த் பெருமிதத்துடன் கூறுகையில், 
''மருத்துவம்போல உன்னதப் பணி உலகிலேயே கிடையாது. எனக்கு செல்வம், புகழ், நற்பெயரைச் சம்பாதித்துக்கொடுத்தது, இந்த மருத்துவத் தொழில்தான். மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பது மட்டுமே இப்போது என்னுடைய ஆசை'' என்கிறார். 

இந்த 102 வயது டாக்டர் மீது பற்றும் பாசமும் வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், புனே நகரம் முழுவதும் நிரம்பி உள்ளனர். இவரிடம் 35 வருடங்களாக மருத்துவம் பார்க்கும் ராஜ்பதக், ''டாக்டரைப் பார்த்தாலே நோயில் பாதி குணமாகிவிட்டதாக உணர்வோம்; 
101 சதவிகித நோய் குணமடையும் என்பது உத்தரவாதம்'' என்று கூறுகிறார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க