Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு... கருணைகாட்டும் உச்ச நீதிமன்றம்!

’நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தவர்கள், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டுமொரு வாய்ப்புத் தர வேண்டும்’ என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  

demonetisation
 

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவிலிருந்து, மக்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மக்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள, டிசம்பர் -31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் தங்கள் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொண்டனர். பின்னர், புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. மத்திய அரசின் இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கறுப்புப் பணம் வைத்திருந்தவர்களைக் காட்டிலும் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மேலும், கால அவகாசம் வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. ’நேர்மையாகப் பணம் சம்பாதித்தவர்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகள் வீணாகக் கூடாது. அவர்களுக்குத் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படும்’ என மத்திய அரசு கூறியது. 


இதையடுத்து, ’நேர்மையான வழியில் சம்பாதித்த ஒருவர், தன்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31-க்குள் செலுத்துவதில் சிக்கல் இருந்தது என்பதை நிரூபித்தால், அவருக்கு கண்டிப்பாக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கின்  விசாரணை, 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close