விரைவில் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்!

சீக்கிரமே நாட்டில் 200 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட, இந்திய ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால், நாட்டில் பணப் புழக்கம் மிகவும் சுணக்கம் அடைந்தது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை அதன் தாக்கம் நீடித்தது. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்து, அச்சடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்திடமும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுமதி வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும்வண்ணம், 200 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!