இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமனம்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். 

Achal Kumar Jyoti


இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நஜிம் ஜைதியின் பதவிக்காலம் வருகின்ற 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் குஜராத் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், குஜராத் மாநிலத்தின் பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு வயது 65. நாளை மறு நாள் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்க உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!