'பீர் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது'... அமைச்சர் பகீர் தகவல்!

பீர் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்று ஆந்திர அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 

kothapalli samuel jawahar

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏராளமான மதுபானக் கடைகள் மூடப்பட்டன. குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மதுபானக் கடைகளை திறக்கும் முயற்சியில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.


இதனிடையே, ஆந்திர மாநிலத்தின் கலால் அமைச்சர் கோதப்பள்ளி சாமுவேல் ஜவஹர், பீர் ஒரு ஹெல்த் டிரிங்க் போன்றது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜவஹர், "நான் பீரை ஹெல்த் டிரிங்க் என்று சொல்லவில்லை. ஆனால், மற்ற மதுபானங்களுடன் ஒப்பிடும்போது அது உடல்நலத்துக்கு சற்று ஆரோக்கியமானது. இதனால், மாநிலம் முழுவதும் பீரை புரோமோட் செய்வோம்.


முக்கியமாக, ஆல்கஹால் குறைவாக உள்ள பீரை அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது. ஆனால், குறைவான ஆல்கஹால் உள்ள மதுபானங்களை அறிமுகப்படுத்தி பாதிப்பை குறைக்கலாம் என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!