Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்சார் போர்டு தலைவரிடம் காங்கிரஸ் வேண்டுகோள்!

'இந்து சர்க்கார்' திரைப்படத்தை, தணிக்கை செய்வதற்கு முன் பார்க்க வேண்டும் என்று சென்சார் போர்டு தலைவர் பஹலஜ் நிஹலானிக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம்.

இந்து சர்க்கார்

டிராஃபிக் சிக்னல், ஃபேஷன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுர் பந்தர்கள் அடுத்து இயக்கியுள்ள படம் 'இந்து சர்க்கார்'. 1975 முதல் 1977 வரையில், இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு 'இந்து சர்க்கார்' உருவாகியுள்ளது. நீல் நிதின் முகேஷ், அனுபம் கேர், க்ரிதி குல்ஹரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து அண்மையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின. மேலும், பா.ஜ.க ஆட்சிக்காலம் என்பதால், இப்படம் வெளியாவதில் பெரிய சிக்கல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பை மாநில காங்கிரஸ் தலைவர், 'இந்து சர்க்கார்' படம் குறித்து, சென்சார் போர்டு தலைவர் பஹலஜ் நிஹலானிக்கு கடிதம் எழுதியுள்ளார். 'இந்து சர்க்கார் படம் அவசரநிலை காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பது அதன் ட்ரெய்லர் காட்சிகளைப் பார்க்கும்போது தெரிந்திருக்கும். மேலும், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைச் சித்திரித்து இந்தப் படம் உருவாகியுள்ளது. எங்கள் தலைவர்கள் எந்த விதத்தில் தவறாகச் சித்திரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு, தணிக்கை செய்யும் முன் படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். இதற்கு உரிய முறையில் நீங்கள் உதவ வேண்டும்' என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் சஞ்சய் நிருபம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close