வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (04/07/2017)

கடைசி தொடர்பு:20:07 (04/07/2017)

மூன்று பேருடன் மாயமானது விமானப்படையின் ஹெலிகாப்டர்!

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது.

Iaf Chopper


சமீபகாலமாக நாட்டின் போர் விமானங்கள் மாயமாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகியுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மூன்று பேருடன் அந்த ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருகிறது. 


கடந்த மே மாதம் அசாம் அருகே, சுகோய்-30 ரக போர் விமானம் இரண்டு விமானிகளுடன் மாயமானது குறிப்பிடத்தக்கது.