Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் பேரனை சாகுறதுக்குள்ள பாக்கணும்'... ஏக்கத்தில் பும்ராவின் தாத்தா!

இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெசலிஸ்ட் ஜஸ்பிரிட் பும்ரா. குஜராத்தைச் சேர்ந்த இவர் தன் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு அறிமுகமானார். இன்றளவும் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அதில் இவரது பௌலிங் பலராலும் பாராட்டி பேசப்பட்டது. இதன் விளைவாக, கடந்த 2016 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகி அசத்தி வருகிறார். 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும் 24 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியில் அசைக்க முடியாத பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

Bumrah

இவரின் தாத்தா தற்போது உத்தரகாண்டில் வசித்து வருகிறார். 84 வயதான இவர், ``நான் அகமதாபாத்தில் 3 தொழிற்சாலைகளை வைத்து நடத்தி வந்தேன். இதனை என் மகனும் பும்ராவின் அப்பாவுமான ஜஸ்பீர் சிங் நிர்வகித்து வந்தார். அவர் 2001-ல் இறந்தவுடன், அதனை கவனிக்க ஆளில்லாமல் தொழில் நஷ்டமடைந்தது. அப்புறம் உத்தரகாண்ட் வந்தேன். இங்கே வந்து நாலஞ்சு வேன்களை வாங்கி தொழில் தொடங்கினேன். அதுவும் சரியாக லாபம் கிடைக்காமல் மிகவும் நஷ்டம் ஆகிவிட்டது. எல்லாம் நஷ்டம் அடைந்துவிட்டதால் இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.

Burmrah's Grand Father

என் பேரனை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவன் சிறிய வயதில் இருந்தே நன்றாக கிரிக்கெட் விளையாடுவான். இப்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து விட்டான். அவனை என்னால் டிவியில் தான் பார்க்க முடிகிறது. அவன் நன்றாக விளையாட நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறேன். எனக்கு 84 வயதாகிவிட்டது. இறப்பதற்குள் என் பேரனை பார்க்க வேண்டும்`` என்கிறார் பும்ராவின் தாத்தா சான்டோக் சிங்.

தாத்தாவின் தவிப்பிற்கும் ஆசைக்கும் இணங்க குடும்பத்தை இணைப்பதற்கான பணியில் இறங்கியிருக்கிறது பும்ராவின் குடும்பம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement