Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு... சி.பி.ஐ விசாரணை கோரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா

டார்ஜிலிங் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிசூட்டில் மூன்று பேர் பலியான விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி, ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளது கூர்க்கா ஜனசக்தி மோர்ச்சா.

டார்ஜிலிங் போராட்டம் கூர்க்கா

டார்ஜிலிங்கில் பெரும்பான்மையாக வசிக்கும் கூர்க்கா இன மக்கள் நீண்ட காலமாகவே தனி மாநில கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே, அண்மையில் மேற்கு வங்கத்தில் வங்க மொழி கட்டாயம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்ததையடுத்து, கூர்க்கா இனமக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் சார்பாக பேரணிகளும், தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூன் 17-ம் தேதி, போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மூன்று பேர் பலியானது குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், 'மாநில அரசாங்கத்தின் மீதும் மேற்கு வங்க போலீஸ் மீதும் நம்பிக்கையில்லை. இங்கு நடப்பது முற்றிலும் மனித உரிமை மீறல்' என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, டார்ஜிலிங் கலவரத்தைக் கண்டித்து வருகிற 6-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப் போவதாகவும், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close