ட்விட்டரிலும் சூட்டைக்கிளப்பிய ஜிஎஸ்டி!

ஜிஎஸ்டி வெளியான ஐந்து நாள்களில் ட்விட்டரில் 10 லட்சம் ட்வீட் பதிவுகளைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஜிஎஸ்டி

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒற்றை வரி முறையான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அமலுக்கு வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணமாகவே உள்ளது ஜிஎஸ்டி. சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் ட்ரெண்ட் அடித்த ஜிஎஸ்டி, ட்விட்டரில் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் ஜிஎஸ்டி வெளியான சில நாள்களிலேயே பத்து லட்சம் ட்வீட்டுகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம் தாண்டி நெட்டிசன்களையும் படாதபாடு படுத்தியுள்ளது ஜிஎஸ்டி. அமலுக்கு வந்த நாளிலிருந்து ஹிட்டான ஜிஎஸ்டி தொடர்பான சில வைரல் ஹிட் ஹேஷ்டேக்குகளைப் பார்க்கலாம். #GSTCouncil, #GSTIndia, #GST@GoI, #GSTRate, GST, #GST, #GSTsimplified, #IndiaforGST, askGST, #GSTForCommonMan இதுபோன்ற ஜிஎஸ்டி-யைக் குறிப்பிட்டு வந்த ஹேஷ்டேக்குகள் இதுநாள் வரையில் டாப் ஹிட் லிஸ்ட்டில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!