புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுச்சேரியில் மூன்று நியமன எம்எல்ஏ-க்கள் நியமித்தது தொடர்பாக, புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

nominated MLA
 

காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில், பா.ஜ.க நிர்வாகிகள் மூன்று பேரை நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பா.ஜ.க-வின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளித் தாளாளர் செல்வகணபதி உள்ளிட்டவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எம்எல்ஏ-க்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

மத்திய அரசின் எம்எல்ஏ நியமனத்துக்குத் தடை விதிக்கும்படி கோரி, காங்கிரஸ் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்குத் தொடர்ந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ’மூன்று நியமன எம்எல்ஏ-க்கள் நியமித்தது பற்றி புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே,  ’நியமன எம்எல்ஏ-க்களுக்கு கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்தது செல்லாது’ என்று மாநில முதல்வர் நாராயணசாமி கூறிவருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!