மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு 'நோ' சொன்ன யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதேபோல், பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Yogi Adityanath


ஆதித்யநாத்துக்கு இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்.யு.வி கார்கள் வாங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பரிந்துரையை ஆதித்யநாத் நிராகரித்துள்ளார். குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் பயன்படுத்திய காரையே பயன்படுத்திக் கொள்கிறேன் என்று ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் ஐந்து கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதித்யநாத் கோரக்பூர் கோர்க்நாத் கோயிலின் தலைமை மதகுருவாக உள்ளார். இவர் ஏற்கெனவே, அமைச்சர்களுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் வாங்கும் பரிந்துரையை நிராகரித்தார். பின்னர், இன்னோவா கார் வாங்கும் பரிந்துரைக்கு சம்மதம் தெரிவித்தார். இதற்கு முன்பு உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த, மாயாவதிக்காக லேண்ட் குரூசர் காரும், அகிலேஷ் யாதவுக்காக மெர்சிடிஸ் பென்ஸ் காரும் வாங்கப்பட்டடது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!