மதத்தை காரணம் காட்டி ஹோட்டலில் தங்க தம்பதிக்கு அனுமதி மறுப்பு! | Bengaluru Hotel denied room to interfaith couple

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (05/07/2017)

கடைசி தொடர்பு:18:19 (05/07/2017)

மதத்தை காரணம் காட்டி ஹோட்டலில் தங்க தம்பதிக்கு அனுமதி மறுப்பு!

இந்து-முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த தம்பதிக்கு, பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Banglore Hotel denied room to interfaith couple Shafeek -divya

கேரளாவைச் சேர்ந்த ஷஃபீக் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி திவ்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். கலப்புத் திருமணம் செய்துகொண்ட இவர்கள், பணி நிமித்தமாக பெங்களூருக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கச் சென்ற இவர்களுக்கு, மதத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளை அட்டையை பார்த்த ஹோட்டல் ஊழியர், இந்து-முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே அறையில் தங்க அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் வேறு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தற்போது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் மதவாதம் கொடூரமாக வளர்ந்து வருவதாக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத், 'மதவாதம் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற சம்பவங்கள். இந்து-முஸ்லிம் தம்பதியை அங்கீகரிக்க மறுக்கும் பொதுப்புத்தியை மக்களிடையே புகுத்துகிறது இந்த அரசு', என்று கூறியுள்ளார். மேலும், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.