வெளியிடப்பட்ட நேரம்: 01:07 (06/07/2017)

கடைசி தொடர்பு:10:19 (06/07/2017)

''ஜி.எஸ்.டி வரி நல்ல முயற்சி!'' - பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

''மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி நல்ல முயற்சி'' என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நள்ளிரவு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது. இதற்கு ஒருபுறம் ஆதரவு இருந்தாலும், மற்றொரு புறம் எதிர்ப்புகள் இருந்துவருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு மும்பைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்த பாபா ராம்தேவ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி நல்ல முயற்சியாகும். சித்தா உள்பட மூலிகை மருத்துவம் சம்பந்தப்பட்டவைகள் வளர்ச்சியடையும்; காந்தியின் கனவான சுதேசிப் பொருள்கள் விற்பனையும் அதிகரிக்கும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க