ஆன்லைன் டிக்கெட் சேவை வரி ரத்து! | online train ticket booking service tax cancel

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (06/07/2017)

கடைசி தொடர்பு:10:15 (06/07/2017)

ஆன்லைன் டிக்கெட் சேவை வரி ரத்து!

'ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்தால், சேவை வரி செப்டம்பர் மாதம் வரை ரத்து' என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. 

ரயில் பயணிகளிடம் மின்னணு வழிப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்டுகளின் சேவை வரியை ஜுன் 30-ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி. ரத்துசெய்திருந்தது. இந்நிலையில், சேவை வரி ரத்து, வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேவை வரி தளர்வால், ஆண்டுக்கு ரூ 500 கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி தனது தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முன்னர், ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்டுகளுக்கான சேவை வரியை ஜுன் 30-ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி. ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.