விஜய் மல்லையாவைக் கலங்கடிக்கும் நீதிமன்றங்கள்! | Another non-bailable warrant issued on Vijay Mallya

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (06/07/2017)

கடைசி தொடர்பு:11:09 (06/07/2017)

விஜய் மல்லையாவைக் கலங்கடிக்கும் நீதிமன்றங்கள்!

விஜய் மல்லையாவுக்கு எதிராக அடுத்தடுத்து பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றங்கள் அதிரடி காட்டி வருகின்றன.

விஜய் மல்லையா

பல கோடி ரூபாய் பண மோசடிப் புகாரிலிருந்து தப்பிக்க, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு.

இந்நிலையில், மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புப் பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றம், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக, டெல்லி நீதிமன்றமும் விஜய் மல்லையா மீது வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்திய நீதிமன்றங்களும் இந்திய அரசும் பல்வேறு முறைகளில் லண்டனிலிருக்கும் விஜய் மல்லையாவைக் கைதுசெய்யும் முனைப்பில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

தன்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்துவருகிறார் விஜய் மல்லையா. எந்தக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கும் வரை, தன்னை குற்றவாளி எனக் கூறமுடியாது என்று கூறும் மல்லையா, லண்டன் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று வைத்துள்ளார்.