Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கற்கள் கொண்டுவரப்பட்டன!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கு கற்கள் (ரெட் ஸ்டோன்ஸ்) கொண்டுவரப்பட்டுள்ளன.

ராமர் கோயில் கட்டுவதற்காக வந்திருக்கும் கற்கள்

1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. சுமார் 450 ஆண்டு கால பாரம்பர்யம்கொண்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் ஒரு செயலாக அமைந்தது. கரசேவகர்களின் இந்தச் செயலால், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் உள்ளிட்ட 21 பேரின் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக ராமர் கோயில் கட்டுவதற்காக, ரெட் ஸ்டோன்ஸ் எனப்படும் பெரிய பெரிய கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ராமர் கோயில் கட்டுவதற்கான வேலைகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புதான் மேற்பார்வையிட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, 'இந்தக் கற்கள், ராமர் கோயில் கட்டுவதற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னரும் இதைப் போன்ற கற்கள் அயோத்திக்கு எடுத்துவரப்பட்டன. ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, கற்களை எடுத்துவர பல தடைகளை விதித்திருந்தது. ஆனால், இப்போது ஆட்சியில் இருக்கும் அரசு, அதைப் போன்ற எந்தத் தடை அறிவிப்புகளையும் விதிக்கவில்லை' என்று கூறியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close