Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணத்தை வசூலிக்க பி.எஃப். நிறுவனம் புதிய கூட்டணி அமைக்கிறது!

நிறுவனங்களிடமிருந்து பணத்தை வசூலிக்க வங்கிகளிடம் கூட்டணி அமைத்துள்ளது ‘வருங்கால வைப்பு நிதி நிறுவனம்.’

வருங்கால வைப்பு நிதி

ஈபிஃஎப்ஓ அமைப்பு எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தங்கள் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து பணத்தை வசூலிக்க புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து பணம் வசூலிக்கவும், முதலீடுகளைக் கவனித்துக்கொள்ளவும் வங்கிகள் உதவி புரியும். இதற்காக ஐந்து வங்கிகள் பி.எஃப். அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி., ஆக்ஸிஸ், கோட்டக் மகேந்திரா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகிய ஐந்து வங்கிகளும் இனி பி.எஃப். பணத்தை வசூலிப்பது, பணத்தைத் திரும்பப்பெறும் பயனாளிகளுக்கு தொடர் சேவை அளிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் புதிய கூட்டணி மூலம், வங்கிகளே பி.எஃப். உறுப்பினர்களுக்கு பணம் திருப்பி அளிப்பது என்பதையும் தாண்டி அவர்களின் முதலீடுகளையும் கவனித்து உதவி புரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஐந்து வங்கிகளில் உறுப்பினர்கள் கணக்கு வைத்திருந்தால் வங்கிகளின் மூலமாகவே பி.எஃப். தொடர்பான அத்தனை சேவைகளையும் மேற்கொள்ள முடியும். தற்போது பயனாளர்களின் நலன் கருதி மேலும் ஏழு வங்கிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close