Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

பாலியல் பலாத்காரம்

தலைநகர் டெல்லியின் கிழக்குப்பகுதியான மதுவிஹார் என்ற இடத்தில் காரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 4-ம் தேதி இரவு தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண், தான் பணிப்பெண்ணாக வேலைசெய்யும் வீட்டு உரிமையாளரிடம் மறுநாள் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கம்போல தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை, அப்பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கார் மெக்கானிக்கான காளியா என்பவர், வழிமறித்து அவரது காரில் ஏற்றிச்சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு தனி இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரின் கூட்டாளிகள் இருவர் காருக்கு வெளியே நின்றுகொண்டு, அந்தப் பாதகச்செயலுக்கு உதவியுள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை மிரட்டி, அவரின் வீட்டுக்கு அருகே கொண்டுவிட்டுள்ளார் காளியா. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், காளியாவையும் அவருக்கு உதவிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

டெல்லியில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close