Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடிக்கு ஜிஎஸ்டி ஐடியா கொடுத்தது இவரா? - அதிரிபுதிரி தமிழ் சினிமாக்கள்

சினிமாவைப் பார்த்துக் கெட்டுப்போவாங்கன்னு நம்ம ஊர்களில் ஒரு பேச்சு இருக்கும். அதைக் கேட்கும்போது வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் இருந்தாலும் இந்தியாவில் சமீபகாலமாக நடந்துவரும் புது மாற்றங்களையும், சட்டங்களையும் பார்க்கும்போது அது உண்மைதானோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. 'இந்தியா', 'சட்டம்', 'புது' என்ற வார்த்தைகளையெல்லாம் வைத்து நான் யாரைச் சொல்றேன்னு நீங்களே கொஞ்சம் கணிச்சுருப்பீங்க. வேற யாரு நம்ம மோடிஜிதான். ஒவ்வொரு நாள் விடியும்போதும் இன்னைக்கு என்ன எல்லாம் பண்ணக் காத்துருக்காரோங்கிற கேள்வியில ஆரம்பிச்சு, சாயங்காலம் 'இன்னைக்கு ஒரு நாளைக் கடத்திட்டேன் நான் ஜெயிச்சுட்டேன்'ங்கிற கவுண்டமணி டயலாக்கோட அன்றைய நாள் முடியுது. ஒரு மனுஷன் ஒரு படத்தைப் பார்த்து அதுல இன்ஸ்பயராகி வேற ஏதாவது ஒரு படம் எடுக்கலாம்... இல்லேன்னா நிஜ வாழ்க்கையில நடக்குற நிகழ்வுகளையெல்லாம் வெச்சு ஒரு படம் எடுக்கலாம். படத்தைப் பார்த்துட்டு புதுசா ஒரு சட்டத்தையா போடுறது? வடிவேலு கேட்குற மாதிரி இரக்கம் இல்லையா உங்களுக்கு? அப்படி என்ன படங்களைப் பார்த்து இவர் தினுசு தினுசா சட்டதிட்டங்கள் போடுறார்? ஒரு சின்னக் கற்பனை!

மோடி

* கமல், கௌதமி நடிப்பில் வெளிவந்த படம் 'நம்மவர்'. இந்தப் படத்தைவிட அதில் இடம்பெற்ற 'சொர்க்கம் என்பது நமக்கு... சுத்தம் உள்ள வீடுதான்' எனும் பாடல் செம ஹிட்டானது. அது போக பல சுத்தம் சம்பந்தமான பாடல்களை ஒரு நாள் முழுக்கக் கேட்டு, அதில் 'சுத்தம்', 'தூய்மை' 'வீடு', 'நாடு' போன்ற நான்கு வார்த்தைகளை நறுக்கி எடுத்து 'தூய்மையான இந்தியா' என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார். இதுதான் இதுக்குப் பின்னாடி இருக்குற கதை.

* ரஜினி, ஐஷ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த படம் 'எந்திரன்'. இந்தப் படத்துல ரஜினியோட நோக்கமே உலகில் எல்லாவற்றையுமே எந்திரமயமாக்குதல்தான். அந்தப் படத்தை நைட் அரைகுறைத் தூக்கத்தோடு பார்த்திருப்பார் போலும், அடுத்த நாளே 'டிஜிட்டல் இந்தியா' எனும் புது குண்டை மக்களை நோக்கி வீசினார். அவர் உருவாக்க நினைத்தது என்னவோ படத்தின் முதல் பாதியில் வரும் சிட்டிதான். அது கொஞ்சம் எசகுபிசகாகி இரண்டாம் பாதியில் வரும் வில்லன் சிட்டியைப் போல் ஆகிவிட்டது.

* விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த படம் 'பிச்சைக்காரன்'. அந்தப் படத்தைவிட அதில் இடம்பெற்ற 'லஞ்சத்தை ஒழிக்கிறதுக்கு என்ன வழி?' என்ற கேள்விக்கு படத்தில் வரும் பிச்சைக்காரன், 'ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் தடை பண்ணிட்டா இந்தியாவில் லஞ்சமே இருக்காது' என்று டைரக்டர் சொன்னது போல் சொல்லியிருக்கார். அந்தப் படத்தை மதியம் மேட்னி ஷோ பார்த்துவிட்டு இரவோடு இரவாக செல்லாது என்று அறிவித்துவிட்டார் மோடி. அதன் தாக்கத்தால் சைதாப்பேட்டை ஏடிஎம் வாசலில் ஆரம்பித்த மக்கள் கூட்டம் அண்ணா நகர் வரைக்கும் நின்றது. அது போக சிவாஜி படத்தில் எண்ட் கிரெடிட்ஸில் குறிப்பிட்ட இந்த விஷயம் நிஜமாகவே நடந்துவிட்டது. ஒருவேளை மோடிக்கும் நம்ம டைரக்டர் ஷங்கருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

எந்திரன், பிச்சைக்காரன், சிவாஜி

* சரி சாப்பிடுற சாப்பாட்டுக்கு எதுவும் பங்கம் வராது என்று பெருமூச்சு விட, அதுக்கு ஹார்ட் அட்டாக் வரும்படியான ஒரு சட்டத்தை அமல்படுத்தினார் மோடிஜி. 'இறைச்சிக்காக மாடுகளை வெட்டத் தடை' எனும் சட்டத்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். குறிப்பாக உழவுக்காகட்டும், உணவுக்காகட்டும் மாட்டை நம்பித்தான் பலரின் அன்றாட நாள் நகர்கிறது. இந்தத் திட்டத்தை அமல்படுத்த பல படங்களில் இன்ஸ்பயராகியிருப்பார். முக்கியமாக ராமராஜனின் 'ஷெண்பகமே' பாடலை இறுதியில் பார்த்து வெறியேத்தி முடிவில் அந்தத் திட்டத்தை அமல்படுத்தியிருப்பார். 

* இப்போ நம்மைக் குரங்கு பல்டி அடிக்க விடும் விஷயம் ஜிஎஸ்டி. இதை சட்டமாகக் கொண்டு வரலாம் என்ற முடிவை பல படங்களைப் பார்த்து இன்ஸ்பயராகியிருப்பார். எந்தப் பிரச்னைக்கும் அல்டிமேட்டா இருக்குற விஷயம் பணம்தான். அதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும்னு நெனைச்ச மோடி, 'சிவாஜி', 'கந்தசாமி', 'முதல்வன்' போன்ற படங்களைப் பார்த்திருக்கக்கூடும். இதன் தாக்கம் தியேட்டர் வரை பிரதிபலித்தது. அதில் கடுப்பான ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிஎஸ்டி-யை எதிர்த்து ட்வீட் போட்டார். அதிலிருந்து சங்கருக்கும் மோடிக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்த சந்தேகம் தீர்ந்தது.

* மோடி வீட்டுல இருக்க யாரிடமாவது சொல்லி இந்த 'இந்தியன்' பட சி.டியை மட்டும் ஒளிச்சுவைக்கச் சொல்லணும். ஒருவேளை பார்த்துட்டா இடுப்புல கத்தியை வெச்சுக்கிட்டுக் கிளம்பிடுவார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close