இந்தியும் வேண்டாம்... ஆங்கிலமும் வேண்டாம்... எதிர்க்கும் கன்னடர்கள்! | Anti-Hindi row now also includes English in Karnataka

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (06/07/2017)

கடைசி தொடர்பு:18:58 (06/07/2017)

இந்தியும் வேண்டாம்... ஆங்கிலமும் வேண்டாம்... எதிர்க்கும் கன்னடர்கள்!

கர்நாடகாவில் இந்தி, ஆங்கிலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என்று கூறி மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன. 

Anti Hindi


இதையடுத்து, சமூக வலைதளங்களில் #NammaMetroHindiBeda என்ற ஹேஷ்டேக் வைலரானது. 'இது எங்கள் மெட்ரோ, எங்களுக்கு இந்தி வேண்டாம்' என்பது அதன் பொருள். கர்நாடகா ரக்‌ஷனா வேதிகே என்ற அமைப்பினர் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனிடையே, அவர்கள் தற்போது ஆங்கிலத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். பெங்களூரு ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள ஒரு ஹோட்டலின் பெயரில் இருந்த ஆங்கில எழுத்துகளை அவர்கள் அழித்துள்ளனர்.


இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "பெரும் நிறுவனங்கள் எங்களது நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மின்சாரமும் கர்நாடக அரசு வழங்குகிறது. ஆனால், கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டும் இவர்கள் கொடுப்பதில்லை. முதலில் டெல்லி உள்ளிட்ட இடங்களில் கன்னட எழுத்துகளை பொது இடத்தில் பயன்படுத்தட்டும். பிறகு, நாங்கள் இந்தி, ஆங்கிலத்தைப் பொது இடங்களில் பயன்படுத்துகிறோம்" என்கின்றனர்.