வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (06/07/2017)

கடைசி தொடர்பு:19:53 (06/07/2017)

புர்ஹான் வானி நினைவு தினம்... காஷ்மீரில் இணைய சேவைகள் நிறுத்தம்!

புர்ஹான் வானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், காஷ்மீரில் இணைய சேவைகளை ரத்து செய்யும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Internet services in kashmir valley to be stopped over Burhan Wani Day

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீரில் பிரிவிணைவாத கருத்துகளை முன்வைத்து இவர் போராடி வந்தார். புர்ஹான் வானி கொலை செய்யப்பட்டதையடுத்து காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் தொடர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், கடந்த ஓராண்டாகவே அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், புர்ஹான் வானி நினைவு தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்படவுள்ளது. இதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நாளை இரவு 10 மணியில் இருந்து இணைய சேவைகள் நிறுத்தப்படவுள்ளன. இது குறித்த உத்தரவு இணைய சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே காஷ்மீரில் பல்வேறு காரணங்களுக்காக இணைய சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.