Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாலு பிரசாத் யாதவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை!

2006-ல் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது, சிபிஐ புதிய வழக்கு பதிவுசெய்துள்ளது.

CBI raid Lalu Prasad Yadav

1991-1993 காலகட்டத்தில், ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அந்த நேரத்தில், மாட்டுத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர், பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். தற்போது, அந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவருகிறது. பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவுசெய்துள்ளது. ராஞ்சி, புரியில் ஹோட்டலுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்த புகாரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, லாலுவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி, பாட்னா, ராஞ்சி, புரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close