பெங்களூருவில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை! காரணம் இதுதான் | Bengaluru metro services stopped temporarily after protest by metro workers

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (07/07/2017)

கடைசி தொடர்பு:11:30 (07/07/2017)

பெங்களூருவில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை! காரணம் இதுதான்

பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு ரயில் சேவை முடங்கியுள்ளது.

Bengaluru metro services stopped temporarily after protest by metro workers

பெங்களூருவில் நேற்று மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களுக்கும் மாநில தொழில்துறை பாதுகாப்பு படை வீரருக்கும் மோதல் வெடித்தது. ரயில் நிலையத்துக்குச் செல்லும் முன், உடைமைகளைச் சோதனை செய்ய வேண்டும் என்று பாதுகாப்புப் படை வீரர் கூறியுள்ளார். இதற்கு மெட்ரோ ஊழியர் ஒருவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் உருவானது. இதையடுத்து மெட்ரோ ஊழியர்கள் பாதுகாப்புப் படை வீரரை சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து மெட்ரோ ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மெட்ரோ ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை முடங்கியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் இன்று சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.