Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8-ம் வகுப்பு வரை இனி ஆல்பாஸ் இல்லை!

ந்திய அளவில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல்பாஸ் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

மாணவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆல்பாஸ் என்ற நிலையே காணப்பட்டது. இதனால் 8-ம் வகுப்பை முடித்து வெளியில் வரும் குழந்தைகளுக்கு எழுதப்படிக்கக்கூடத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நடைமுறையை மாற்றும்படி பல மாநிலங்களும் குரல் கொடுத்து வந்தன. மாணவர்கள் தங்களது கற்றல் திறன் அடிப்படையில் தேர்ச்சி அளித்தால்தான் கல்வித்தரத்தைக் காப்பாற்ற முடியும் என்பது அனைவரின் வாதமாக இருந்து வந்தது.

இதன் அடிப்படையில் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் எனும் நடைமுறை அடுத்த கல்வியாண்டிலிருந்து ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இனி வரும் காலத்தில் பள்ளி மாணவர்கள் படித்தால் மட்டுமே எந்த வகுப்பிலும் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement