இதையும் விட்டுக்கொடுக்கலாமே மக்களே... மத்திய அரசின் புதிய கோரிக்கை! | Railways to offer new options in senior citizen fare concession

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (07/07/2017)

கடைசி தொடர்பு:12:40 (07/07/2017)

இதையும் விட்டுக்கொடுக்கலாமே மக்களே... மத்திய அரசின் புதிய கோரிக்கை!

சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகை, தங்களுக்குத் தேவையில்லை என்றால் அதை விட்டுக்கொடுக்கலாம். அந்த மானியத் தொகை ஏழை எளிய மக்களைச் சென்றடையும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பெரியளவில் விளம்பரம் செய்தது பா.ஜ.க அரசு. அதே யுக்தியை ரயில்வே துறையிலும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

senior citizen
 

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் முதியவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைதான் அதிகம். இதுபோன்று சலுகைகள் வழங்குவதால் ரயில்வே துறைக்கு ஒவ்வொர் ஆண்டும் 1,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கிய முதியவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் போய் சேர வேண்டும். சலுகை வேண்டாம் என்பவர்கள் விட்டுக்கொடுத்துவிடலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

’முதியவர்கள் 100% சலுகையையும் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துவிடலாம். அப்படியில்லையென்றால் 50% சலுகையை மட்டும் விட்டுக்கொடுக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போதே ’50% சலுகை வேண்டுமா, 100% வேண்டுமா, சலுகையே வேண்டாமா” என்னும் மூன்று ஆப்ஷனை சேர்க்க உள்ளனராம். இதனால் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படும் என்கிறது ரயில்வே வட்டாரங்கள்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க