Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஹாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை கண்டுபிடிக்க கருவிகள்...!

சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத்  தடை விதித்து. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராகப்  பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. அரசின் இந்த அறிவிப்புக்கு பல மாநில அரசுகள் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. 

Meat


குறிப்பாக, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையை ஏற்க முடியாது என்று அறிவித்தன. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. மாட்டிறைச்சி தொடர்பாக தினம் ஒவ்வொரு சர்ச்சை நாடு முழுவதும் நடந்து வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பதைக் கண்டறிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தக் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் மாட்டிறைச்சியைக் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 40-க்கும் மேற்பட்ட தடயவியல் வாகனங்களில் இந்தக் கருவி பொருத்தப்பட உள்ளன. ஒரு வண்டியில் இதைப் பொருத்த சுமார் 8 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கருவி மூலம் 1000 மாட்டிறைச்சி மாதிரிகளைக் கண்டுபிடிக்க முடியுமாம். விரைவில் இது காவல்துறையினரின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement