வெளியிடப்பட்ட நேரம்: 00:42 (08/07/2017)

கடைசி தொடர்பு:00:42 (08/07/2017)

அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு! - உ.பி. அரசு அதிரடி!

யோகி ஆதித்யநாத்

த்தரப்பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத்  அரசு பதவியேற்றதுமுதல் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது. இந்த நிலையில், ''அரசு ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்'' என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் ராஜீவ்குமார் வெளியிட்ட அறிக்கையில், ''அரசுத் துறைகளில் பணியாற்றும் 50 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு, அவர்களின் பணி ஆய்வு செய்யப்படும். அப்போது சிறப்பாகச் செயல்படாத அரசு ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இதுதொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த துறை ஊழியர்களைக் கண்காணித்துச் சிறப்பாகச் செயல்படாதவர்கள் குறித்த பட்டியலை அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும், அரசு ஊழியர்களை நீக்குவதால், அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்புக் கிடைக்கும். மத்திய அரசும் சமீபத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளது'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க