Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''புதிய எம்.ஆர்.பி விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை!'' மத்திய அரசு எச்சரிக்கை 

ராம் விலாஸ் பஸ்வான்

''ஜி.எஸ்.டி-க்குப் பிறகு, பொருள்கள்மீது புதிய எம்.ஆர்.பி விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பொருள்கள்மீது விலை பட்டியலை ஒட்டாத நிறுவனங்களுக்கு 1 லட்சம் ரூபாய்வரை அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும். பொருள்களை வரும் செப்டம்பருக்குள் விற்பனை செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி-யில் நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்க்க, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக உதவி எண்கள் 60 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 14 எண்கள் வரி தொடர்பான பிரச்னைகள் தீர்க்க அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 700 புகார்கள் வந்துள்ளன. இதனைத் தீர்க்க நிதியமைச்சகம் உதவி கோரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது சில பிரச்னைகள் ஏற்படும்.

ஆனால், அவை விரைவில் சரி செய்யப்படும். நிதி, நுகர்வோர் விவகாரத் துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களும் பிரச்னைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர், சில பொருள்கள் விலை குறைந்துள்ளன; சில பொருள்கள் விலை ஏறியுள்ளன. விற்பனையாகாமல் இருக்கும் பொருள்களில், அதிகபட்ச விலை அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் ஜி.எஸ்.டி-க்கு பிந்தைய விலை மாற்றம் குறித்து நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும். இதனை செய்யாத உற்பத்தியாளர்கள்மீது முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், மூன்றாவது முறை 1 லட்ச ரூபாயுடன் ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும்'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close