Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலைநகரில் பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்... கொலையாளி கைது!

டெல்லியில் இளம்பெண் ஒருவரை பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி பெண் கொலை

டெல்லியில் கடந்த வியாழனன்று ரியா கவுதம் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இவரை வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாடும் தெருவில் நடந்த இந்த கொடூர சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். நிர்பயாவின் கொடூர கொலைக்கு பிறகும், டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் இருப்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில் இளம்பெண்ணை கொலை செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்த ஆதில் மீது ஏற்கெனவே கார்திருட்டு வழக்கு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, ஆதில் ஒருவருட காலமாகவே தங்கள் மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக, ரியா கவுதமின் பெற்றோர் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement