Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜஸ்தானில் 2 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

ராஜஸ்தானில் சுமார் 2 கோடி 70 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. மேலும் பணமதிப்பு நீக்கம் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பின. இது ஒருபுறம் இருக்க, சட்டவிரோதமாக புதிய நோட்டுகளை மாற்றியது, பழைய நோட்டுகளை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றசாட்டுகளில் பலர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் சுமார் 2 கோடி 70 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், இந்த பணம் சிக்கியுள்ளது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த குற்றசாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர் காவல்துறையினர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close