மேற்குவங்க வன்முறை : பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை கருத்து!

2002 கலவரத்தில் குஜராத் ஹிந்துக்கள் செயல்பட்டது போல, மேற்கு வங்கத்தில் உள்ள ஹிந்துக்கள் பதிலடி தர வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்.

ராஜா சிங்

மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டார்ஜிலிங்கில் உள்ள கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கோரி போராடி கொண்டிருப்பதால், அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங். இது குறித்து பேசிய அவர், 'மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குஜராத் கலவரத்தின் போது அங்குள்ள ஹிந்துக்கள் செயல்பட்டது போல, மேற்கு வங்கத்தில் உள்ள ஹிந்துக்கள் பதிலடி தரவேண்டும். இல்லையென்றால் மேற்கு வங்கம் விரைவில் வங்காள தேசமாக மாறிவிடும்' என்று அவர் கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!