Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாடு வாங்க பணமில்லை... மகளை வைத்து நிலத்தை உழுத விவசாயி!

மாடு வாங்க பணமில்லாததால், தனது 2 மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார் மத்திய பிரதேச விவசாயி ஒருவர்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் விவாசாயிகள் தங்கள் பொருள்களுக்கு முறையான விலை நிர்ணயிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சௌகான் அளித்த வாக்குறுதியை ஏற்று அங்கு போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே மத்திய பிரதேசம் பசந்த்பூர் கிராமத்தில் மாடு வாங்க பணமில்லாததால், மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார் விவசாயி ஒருவர். 'மாடுகள் வாங்கவோ, அதை பரமாறிக்கவோ போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அதனால் தான் எனது மகள்களை வைத்து நிலத்தை உழுகிறேன். மேலும் பண நெருக்கடி காரணமாக எனது இரு மகள்களும் படிப்பை நிறுத்திவிட்டனர்' என்று கூறியுள்ளார் அந்த ஏழை விவசாயி.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close