Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவை மீட்டுவர ஜி-20யில் பேசிய மோடி

மோடி

ஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஐந்து நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் திரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது,ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டார்.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் 20 நாடுகள் பங்கேற்ற வளரும் நாடுகளின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த மாநாடு இந்த ஆண்டு ஹம்பர்க்கில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக, இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-வைச் சந்தித்து விரிவான பேச்சுகள் நடத்தினார். இஸ்ரேல்- இந்தியா இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் மோடி அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். இஸ்ரேல் நாட்டிற்குச் சென்ற முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருநாட்டு மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து டெல்- அவிவ் நகருக்கு விமானப்போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனியின் ஹம்பர்க் நகருக்குச் சென்றார். ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டதுடன், மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் சந்தித்து, இந்தியாவுடனான இருதரப்பு நல்லுறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் இத்தாலி, நார்வே நாடுகளின் பிரதமர்களையும் மோடி சந்தித்துப் பேசினார்.

விஜய் மல்லையா

அனைத்துக்கும் மேலாக, பிரிட்டன் பிரதமர் தெரஸா மே-வைச் சந்தித்துப் பேசியபோது, தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர ஆதரவு அளிக்குமாறு மோடி கேட்டுக்கொண்டார். தவிர, நிதி மோசடி குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடியையும் இந்தியாவுக்கு அழைத்துவர பிரட்டன் உதவ வேண்டும் என்று அந்நாட்டு பிரதமரிடம் வலியுறுத்தினார். பிரட்டன் தேர்தலில் தெரஸா மே வெற்றிபெற்ற பின்னர், மோடி முதல்முறையாக அவரைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, ஜி- 20 நாடுகள் மாநாட்டில், மகளிர் முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்றும், பயங்கரவாதத்தை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் மோடி தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

ஜி- 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனால், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அந்நாடு மட்டும் பாரீஸ் ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை.

ஜி 20 மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி, டெல்லி வந்தடைந்தார். இந்தப் பயணம் பல்வேறு நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுகளை நடத்த வழிவகுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் உரிமையாளரான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அவரை லண்டனில் கைது செய்த அந்நாட்டு அரசு, ஓரிரு மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியது.

'நாடு முழுவதும் ஒரே வரி' என்ற முழக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரியை விதித்து, இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய மக்களை குழப்பத்திலும், கடும் சுமையிலும் ஆழ்த்தியுள்ள மத்திய அரசு, "விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவந்து விட்டால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?" என மக்கள் கேட்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement