Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலவரமாக வெடித்தது கூர்க்காலாந்து போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!

டார்ஜிலிங்கில் ‘கூர்க்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறை நிறைந்த கலவரமாக வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கூர்க்காலாந்து

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளனர். காலவரையற்ற போராட்டம், கடையடைப்பு என இருந்து வந்த போரட்டத்தில் கூர்க்கா அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதால் தீவைப்பு, கடை உடைப்பு என மக்கள் போராட்டம், கலவரமாக வெடிக்கத் துவங்கியுள்ளது.

மக்களுக்குள் வெடித்துள்ள இந்த வன்முறைப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கலவரத்தால் டார்ஜிலிங் பகுதியில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close