Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலபார் 2017: வங்கக்கடலில் இந்தியா கூட்டுப் போர் பயிற்சி

சென்னை அருகே வங்கக்கடலில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டுப் போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இந்தியா போர் பயிற்சி

வங்கக்கடலில் ‘மலபார்- 2017’ என்ற போர் கூட்டுப் பயிற்சியை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் ஜப்பான் மேற்கொள்ளவுள்ளன. இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதற்காகவே இந்தக் கூட்டுப் போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

‘மலபார்- 2017’ என்ற இந்தக் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க்கப்பல்கள் கடந்த 7-ம் தேதி அவரவர் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தன. இந்தப் போர் பயிற்சியில், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தடுத்தல், நீர்மூழ்கிக்கப்பல் தாக்குதல், கடலில் மூழ்கிவிட்டவர்களை மீட்பது, கடலில் மேற்கொள்ளப்படும் தேடுதல் வேட்டைகள் போன்ற பல்வேறு போர் பயிற்சிகளை இணைந்து மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர். இந்தக் கூட்டுப்பயிற்சி ஜூலை 17-ம் தேதி வரை சென்னையின் அருகே வங்கக்கடலின் நடுவே மேற்கொள்ளப்படவுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close