Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடையாது! பியூஷ் கோயல் திட்டவட்டம்

அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வழங்க முடியாது என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  

Piyush Goyal
 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பியூஷ் கோயல், ''கூடங்குளம் 3, 4 உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தமிழகத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் என்.எல்.சி-க்கு ரூ.508 கோடி செலவு குறைந்துள்ளது. அதாவது, நிலக்கரி கொள்முதல் விலை குறைந்துள்ளது. உதய் மின்திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு நிதி மிச்சமாகும். தமிழகத்தில் மின்சாரத் துறை வளர்ச்சி அடையும். 

piyush goyal
 

எண்ணூர் துறைமுகம் தனியார் மயமாக்கப்படாது. செய்யூர் நிலக்கரி மின் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். அதே சமயம் அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை. தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement