Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்கு வங்கக் கலவரம்குறித்து தவறான படம்... பி.ஜே.பி. தலைவர் மீது வழக்குப்பதிவு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'அனைத்துப் பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம்' என்று அறிவித்ததையடுத்து, அங்கு போராட்டம் தீவிரமடைந்தது. மேலும், கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது. 

Nupur Sharma

இதையடுத்து, 'சமூக வலைதளங்களில் தவறான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம்குறித்து பி.ஜே.பி-யின் டெல்லி செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, மேற்கு வங்கக் கலவரத்தின் படத்துக்குப் பதிலாக, 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரப் படங்களை இணைத்து ட்வீட் செய்தார்.

 


இதனால், தவறான படம்மூலம் தவறான செய்தியைப் பரப்புகிறார் என்று அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "தவறான செய்திகளைப் பரப்பி, ஃபேஸ்புக்கை, ஃபேக்புக்காக சிலர் பயன்படுத்திவருகின்றனர். தங்களது அரசியல் நலனுக்காக, இதுபோன்று பொய் பேசுதை மேற்குவங்க மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement