வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (11/07/2017)

கடைசி தொடர்பு:14:40 (11/07/2017)

’மாட்டிறைச்சி விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்க முடியாது’ - வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு அண்மையில் தடை கொண்டுவந்தது. இந்தத் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரைக் கிளை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதித்தது.


இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று பதிலளித்த மத்திய அரசு, "இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கொண்டு வந்த கட்டுப்பாட்டை தளர்த்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறோம்" என்று தெரிவித்தது. 


மத்திய அரசின் பதிலையடுத்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் கிளை விதித்த தடையை நீக்க மறுத்து இந்த வழக்கை முடித்து வைத்தது. அதாவது, வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், முடித்து வைத்தல் என்பது பிற்காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது குளறுபடி இருந்தால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கலாம். அதனால், பிற்காலத்தில் மத்திய அரசு கூறியதைப்போல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தாவிட்டால் இந்த வழக்கை மீண்டும் தொடங்கலாம். எனவே, தற்போது நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்கலாம் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தொடர்கிறது.