வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (11/07/2017)

கடைசி தொடர்பு:15:51 (11/07/2017)

நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு நிரந்தரத் தடை; பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கண்ணாடி துகள்கள் மற்றும் உலோகத் துகள்களைப் பயன்படுத்தி மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது. பட்டம் விடுவதற்காகத் தயாரிக்கப்படும் இந்த மாஞ்சா நூல் அடிக்கடி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வந்தது. அதனால், மாஞ்சா நூலைத் தடை செய்ய வேண்டும் என்று பீட்டா பிராணிகள் நல அமைப்பு சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக்கி உத்தரவிட்டது.